பிரபல குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

Author: Shree
2 September 2023, 1:01 pm

கடந்த சில நாட்களாகவே காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. விவேக், மனோபாலா, மயில்சாமி போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் மரணம் எய்தியது பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அடுத்ததாக தற்ப்போது பிரபல காமெடி நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி (66) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 80-களின் பிரபல திரைப்பட நடிகராக இருந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி அதன் பின்னர் காமெடி ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக கமல்ஹாசனின் ‘அபூர்வ சகோதர்கள்’ திரைப்படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு கமலின் படங்களில் தவறாமல் இடம்பெறும் நடிகர்களில் ஒருவரானார். இவர் சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ , நயன்தாராவின் ’கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், நேற்று சென்னையில் நடைபெற்ற உலக சினிமா விழாவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.சிவாஜி கலந்து கொண்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?