கானா பாடகர் சந்தானம் – வெளியானது பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர்

18 January 2021, 9:28 pm
santhanam - updatenews360
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் சக்கபோடு போட்டுக்கொண்டிருந்தார் சந்தானம். அவரின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட சிம்பு மன்மதன் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அதன்பின் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பின்னிப் பெடல் எடுத்து கொண்டிருந்தார் சந்தானம். இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், கலகலப்பு என காமெடி பட்டாசுகள் படங்கள் வெற்றியடைய காரணமாக இருந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் காமெடி ரோலை விட்டுவிட்டு ஹீரோவாக நடிக்க வந்த சந்தானம், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார். அதன் பின் தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் சக்க போடு போடு ராஜா, ஏ1 என பல படங்களில் நடித்துவிட்டார். அதில் பாதி படங்கள் சுமாராக ஓடினாலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் சமீபத்தில் டகால்டி, டிக்கிலோனா போன்ற படங்கள் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தான் நடித்துள்ள அடுத்த படத்தின் டிரைலரை இன்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாரிஸ் ஜெயராஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கதைப்படி சந்தானம் கானா பாடகர் என்பதால் அதகளமான கானா பாடல்களை வழங்கி வரும் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைப்பது சரியான தேர்வு என பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக காவியத்தலைவன் படத்தில் நடித்த அனைகா சோதி நடிக்கிறார். இந்த படத்தின் டிரைலரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்

Views: - 9

0

0