Corona-வால் மேலும் ஒரு தமிழ் சினிமா நடிகர் பலி : இன்னும் எத்தனை பேர காவு வாங்க போவுதோ…?

17 June 2021, 10:26 am
Shaman mithru - Updatenews360
Quick Share

கடந்த சில மாதங்களாக, யாராவது இறந்த செய்தியில் தான் கண் முழித்து வந்தோம். கடந்த சில நாட்களாக எந்த வித துக்க செய்தியை நாம் பெரிதாக கேள்விப்படவில்லை. உலகளவில் பரவிவரும் கொரோனா, தற்போது சில நாட்களாக ஓய்வு பெற்று வந்த நிலையில் இப்போது இன்னொரு திரை நட்சத்திரத்தையும் அதனுடன் அழைத்து சென்ற செய்தி, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நிதீஷ் வீரா, மாறன், இயக்குனர் அருண் ராஜாவின் மனைவி உள்பட ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி இறந்தனர்.

இந்நிலையில் தொரட்டி என்னும் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஷமன் மித்ரு உயிரிழந்தார்.

இதில் இன்னொரு சோகமான விஷயம் என்ன என்றால் இதே கொரோனாவால் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் ஷமன் மித்ரு.

Views: - 398

0

0