வேறொரு பெண்ணுடன் சாந்தனு… பிரிந்து சென்ற கிகி : உறவில் ஏற்பட்ட விரிசல்..!!

Author: Vignesh
18 September 2023, 2:08 pm

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாரிசு குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் அறிமுகமான பலர் திறமையில்லாததால் பெரிய படங்களின் வாய்ப்புகள் கிடைத்தும் அடையாளம் தெரியாமல் போயியுள்ளனர். அந்த லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் வாரிசு நடிகர் தான் சாந்தனு பாக்யராஜ். இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் ஒரே மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாந்தனு 2008ஆம் ஆண்டு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தின் கதை முதலில் நன்றாக இருந்ததாம். ஆனால் மகனின் முதல் படம் மாபெரும் ஹிட் அடிக்கவேண்டும் என எண்ணிய பாக்யராஜின் அந்த கதையில் குறுக்கிட்டு சில மாற்றங்களை செய்யவே அது பிளாப் ஆகிவிட்டதாம். இதனால் அவர் தோல்வி பட ஹீரோவாக முத்திரைகுத்தப்பட்டு எழுந்திரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனிடையே பிரபல தொகுப்பாளனியான கிகி விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தாங்கள் இருவரும் காதலித்து வந்த போது ஒருமுறை எங்களுக்குள் சண்டை வந்து இரண்டு நாட்களாக இருவரும் பேசாமல் இருந்து வந்தோம்.

kiki vijay

அந்த சமயம் பார்த்து நான் என் தோழி ஒருவருடன் காஃபி ஷாப்பிற்கு சென்றேன். இதை கிகியின் நண்பர் யாரோ போன் செய்து உன் பாய் ஃபிரெண்ட் இங்க வேற யாரோ பொண்ணோட உட்காந்துட்டு இருக்கானு போட்டு கொடுத்துட்டாங்க . இதனால் கடுங்கோபத்திற்கு ஆளான கிகி அன்று பிரேக்கப் செய்துவிட்டார். அதன் பிறகு மறுபடியும் சேர 8 ஆண்டுகள் ஆச்சு. 8 ஆண்டுகள் பிரிந்து இருந்த பிறகு, அதன் பிறகு மேடை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!