கல்யாணத்துக்கு NO சொன்ன நடிகர்… வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாட்டம் …..

Author: Selvan
9 November 2024, 8:36 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார் நடிகர் சிம்பு.

SIMBU 40th  CELEBRATION

பல விமர்சனங்களுக்கு ஆளாகி எதை பத்தியும் கவலைப்படமால் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் 40வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இவர் தனது தந்தை இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2002 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய ‘காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.

simbu weight loss moment

காதல் தோல்வி பல அடைந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தம், அலை, கோவில், குத்து, சரவணா, வல்லவன் என பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் மன்மதனாக திகழ்ந்தார்.

இதையும் படியுங்க: சினிமா இனி வேண்டாம்…கார் ரேஸில் குதித்த நடிகை..அஜித்துடன் போட்டியா….!


படப்பிடிப்பிற்கு சரியாக வராததால் நடிகர் சங்கம் சார்பாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உடல் எடை அதிகரித்து பட வாய்ப்புகள் வராமல் தவித்து வந்தார்.

இனி சிம்புவின் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என்று கேலி செய்த அனைவருக்கும் கொஞ்சம் இருங்க பாய்.இனிமேல் நம்ம ஆட்டத்தை மட்டும் பாருங்கனு டயட் இருந்து உடம்பை பிட் ஆக்கி பழைய மன்மத சிம்புவாக மாறி கேலி செய்த அனைவருக்கும் தக் கொடுத்தார். 40 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிம்புவை ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!