டாக்டர் பட்டம் கொடுப்பதிலும் அரசியலா.? கலைத்துறையில் தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படுகின்றதா டாக்டர் பட்டம்..?

Author: Mari
11 January 2022, 12:35 pm
Quick Share

ஐந்த ஆண்டுகள் ஒருவர், கஷ்டப்பட்டு படித்து ஏதாவது ஒரு துறையில் முதுகலைப்பட்டம் வாங்கி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில், தான் மேற்கொண்ட ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து, அதை வல்லுநர் குழு ஏற்றுக்கொண்ட பிறகுதான், அவர் ‘டாக்டர்’ என்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள முடியும். அது கல்வியால் கிடைக்கும் கவுரவம். இங்கு தொழில் துறை, சமூக முன்னேற்றம், அரசியல், கலை, இலக்கியம், சமுதாயப் பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்த வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் வகையில், பல்கலைக்கழகங்கள் முனைவர் டாக்டர் பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன. அந்த வகையில் கலைத்துறையில், தமிழ் திரையுலகில் திறமையான நடிகராகவும் தமிழ்நாட்டின் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்த எம்ஜிஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகர் விஜயகாந்த், நடிகர் கமலஹாசன், நடிகர் விஜய், நடிகர் விக்ரம், நடிகர் சிம்பு ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், கலைத்துறையில் தகுதியானவர்களுக்குத் தான் டாக்டர் பட்டம் கொடுக்கிறார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


இதனிடையே, கடந்த சில வருடத்திற்கு முன் நடிகர் சிம்பு பாடி, அனிருத் இசையமைத்த ‘பீப்’ பாடல் ஒன்று சமூகவளைதலத்தில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்களை கேவலப்படுத்தும் வகையில் இந்த பாடலில் இடம்பெற்றிருந்த வரிகளுக்கு, மாதர் சங்கம், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் வாதிகள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். ஆனால் இந்த பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் மாறிபோகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது, நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளது. வேல்ஸ் பல்கலைகழகத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ், அவர் திரைப்படத் தயாரிப்பாளரும் கூட, வேல்ஸ் பல்கலைக்கழகம், நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள் என்பதை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, தயாரிப்பாளர் ஏன் நடிகருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்? என உற்று நோக்கினால், கொடுக்கும் பட்டத்திலும் ஒரு அரசியல் கலந்திருப்பது போல தெரிகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். “வெந்து தணிந்தது காடு” படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் என்பது கூடுதல் தகவல்.
டாக்டர் பட்டம் கொடுக்கும் முன் இந்த பட்டம் வாங்க யார் யார் தகுதியானவர்கள்? எந்தெந்த துறையில் என்னவெல்லாம் சாதித்தால் டாக்டர் பட்டம் வாங்க தகுதியானவர்கள் என்பதை விளக்கவேண்டும்.

ஏனெனில், தற்போது, டாக்டர் பட்டமும் பாகுபாடு பார்த்துதான் கொடுக்கப்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாகியுள்ளது. இதனிடையே நடிகர் சூர்யா தனது திறமையான நடிப்பால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும், தனது அகரம் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் பல ஏழை மாணவர்களின் படிப்பு, மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார். அதே போல் நடிகர் அஜித் வில்லன், சிட்டிசன் போன்ற படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

Views: - 337

0

0