அரசியலில் என்ட்ரீ கொடுக்கும் நடிகர் சிம்பு..? மாநாட்டினால் நிகழ்ந்த மாற்றமா… ஆயத்தமாகும் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
30 September 2021, 6:33 pm
simbu - updatenews360
Quick Share

நடிகர் சிம்பு இன்று வெளியிட்டு அறிவிப்பின் மூலம் அவர் அரசியலுக்கு என்ட்ரீ கொடுக்கப் போகிறாரா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் திரையுலகில் இருந்து கொண்டு அரசியலுக்கு வருவது என்பது வழக்கமாகி விட்டது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் விஜயகாந்த், சரத்குமார், கருணாஸ், சந்திரசேகர் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அரசியலில் கால் பாதித்துள்ளனர். அவர்களில் குறிப்பிட்டவர்களே உச்சத்தை அடைந்தும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அரசியல் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும் நடிகர் விஜய், எப்போது என்ட்ரீ கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு இன்று வெளியிட்டு அறிவிப்பின் மூலம் அவர் அரசியலுக்கு என்ட்ரீ கொடுக்கப் போகிறாரா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மதிப்பும்‌ பேரன்புகொண்ட என்‌ இரத்தத்தின்‌ இரத்தமான, என்‌ உறவுகளே வணக்கம்‌, நீண்ட நாளாக இயற்கையின்‌ செயல்களால்‌, உங்களிடம்‌ நேரடியாக உறவாடாமல்‌, உங்களின்‌ தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்‌.மேலும்‌ இளைஞர்‌ அணி, வழக்கறிஞர்‌ அணி, மருத்துவ அணி, தகவல்‌
தொழில்‌ நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின்‌ மூலம்‌ மன்றத்தின்‌ பணிகளை விரிவுபடுத்த உள்ளோம்‌. ஆதலால்‌ நம்‌ நற்பணி மன்றத்தின்‌ அகில இந்திய தலைவர்‌ T.வாசு அவர்களின்‌ தலைமையில்‌ ஆலோசனை கூட்டம்‌ சென்னையில்‌ நடைபெறவுள்ளது.

ஆகையால்‌ மாநில, மாவட்ட, வட்ட, பொறுப்பாளர்கள்‌, நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. (தேதி பின்னர்‌ அறிவிக்கப்படும்‌), எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, அரசியல் கட்சிகளில் இருக்கும் வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணி என்று பல்வேறு அணிகளை உருவாக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருப்பதாகவும் அவர் கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியலை மையப்படுத்தி நடித்து வரும் மாநாடு படத்தின் மூலம் சிம்புவுக்கு இந்த மனமாற்றம் ஏற்பட்டதா..? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

Views: - 337

0

0