சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல… ஒளிப்பதிவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு!!

2 July 2021, 3:18 pm
Quick Share

மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஒளிப்பதிவு திருத்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் குழு மசோதா தொடர்பாக அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சமர்பித்தது.

இந்த மசோதாவின் மூலம் ஒருமுறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம், மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். அதோடு, கதை திருட்டுகளுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்கிறது.

இப்படி பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு பல்வேறு திரையுலகினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…” எனக் கூறி, இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாள், உடனே உங்களின் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 217

0

2