க/பெ.ரணசிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சூர்யா…..நன்றி தெரிவித்தார் விஜய் சேதுபதி

Author: Aarthi
4 October 2020, 6:44 pm
ranasingam poster - updatenews360
Quick Share

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் க/பெ.ரணசிங்கம் திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய க/பெ.ரணசிங்கம் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா, ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் ‘ அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் க/பெ,ரணசிங்கம். இயக்குனர் பி.விருமாண்டி, நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள் என ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு ‘சிறந்த வார்த்தை….நன்றி’ என நடிகர் விஜய் சேதுபதி பதில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Views: - 90

0

0