படப்பிடிப்பில் நடிகைக்கு புடவை கட்டி விட்ட நடிகர்… தேசிய விருது வாங்கிட்டாருனா பாருங்களேன்…!!
Author: Udayachandran RadhaKrishnan9 August 2025, 3:22 pm
சினிமாவில் படப்பிடிப்பு சமயத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து அவர்களே சொன்னால்தான் தெரியவரும். அப்படி ஆப் ஸ்கிரீனில் நடந்த சம்பவங்கள் ஏராளம் உண்டு.
அப்படி தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் தேசிய விருது வென்ற நடிகை ஊர்வசி. இவர் சினிமாவில் அறிமுகமாக காரணமாக இருந்தவர் இயக்குநர் பாக்யராஜ்.
அவர் நடித்து, இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் தான் அறிமுகமானார் ஊர்வசி.அந்த படத்தில் நடிக்கும் போது 9வது தான் படித்துக் கொண்டிருந்தார் ஊர்வசி.
படப்பிடிப்பில் நடந்த சில சுவாரஸ்யமான தகவை பகிர்ந்துள்ளார். முந்தானை முடிச்சு படத்தின் போது, நடிப்பில் ஆர்வம், அனுபவம் இல்லா எனக்கு, பாக்யராஜ் சார் தான் எப்படி நடிக்கணும், சிரிக்கணும், அழுவணும் என கற்றுக்கொடுத்தார்.
முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும் போது புடவை கூட எனக்கு கட்டத்தெரியாது, அப்போது பாக்யராஜ் சார் தான் எனக்கு புடவை கட்டிவிட்டு, எப்படி கட்டணும்,அதை போட்டு எப்படி நடிக்கணும் என கற்றுக்கொடுத்தாக கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட ஊர்வசி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்து, சமீபத்தில் மலையாளத்தில் உள்ளொழுக்கு படத்துக்காக சிறந்து துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
