பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் குக் வித் கோமாளி பிரபலம்? அட, இந்த நடிகரா?
Author: Prasad16 August 2025, 6:50 pm
விரைவில் தொடங்கப்போகும் பிக்பாஸ் 9
சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது வரை 8 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

பிக்பாஸுக்குள் நுழையப்போகும் CWC பிரபலம்!
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ள ஒரு போட்டியாளர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் அசத்தலாக போட்டிபோட்டு வரும் நடிகர் உமைர் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் உமைர், சிவகார்த்திகேயனின் “அமரன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார்.
