சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் : ரசிகர்கள் அதிர்ச்சி!

10 September 2020, 1:50 pm
vadivel balaji - updatenews360
Quick Share

சென்னை : சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் இன்று காலமான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜொலித்து தனது திறமைகளினால் வெள்ளித்திரைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பிரபலமானவர் தான் நடிகர் வடிவேல் பாலாஜி. இவர், வடிவேலு பாணியில் செய்யும் நகைச்சுவைகளினால் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பல்வேறு மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும், வடிவேலு கெட்டப்புகளில் டயாக்குகளை பேசி அனைவரையும் சிரிக்க வைத்து விடுவார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விருந்தினர்களாக வருபவர்களை சிரிக்க வைக்கும் டாஸ்க்கில், தனது நடை, உடை, பாவனைகளினாலே செட்டை கலகலக்கச் செய்து விடுவார்.

இந்த நிலையில், சின்னத்திரையில் கொடி கட்டி பறந்தவர்களில் ஒருவரான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 42. இவரது மரணச் செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 23

0

0