காலில் விழாத குறையாக ஒரு போட்டோவுக்கு விஜய்யிடம் கெஞ்சும் ரசிகர் ! கண்டுகாமல் போன விஜய் ! வைரல் வீடியோ

27 September 2020, 10:14 pm
Quick Share

தளபதி விஜயை தற்போது ஆடியோ Launch அரசியல்வாதி என்று அழைக்கிறார்கள். ஆடியோ Launch – இல் எதாவது பேசிவிட்டு போவதும், அதன் பிறகு வரும் சிக்கல்கள், காலை Show அப்போ படம் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் படும் அவஸ்தைகள் எல்லாம் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

எந்த பிரச்சனையாக இருந்தாலும், எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் விஜய்க்கு அவரது ரசிகர்கள் கண்மூடித்தனமாக முட்டு கொடுத்து வருகிறார்கள். கண்மூடித்தனமாக வைத்திருக்கும் அன்புக்கு காரணம், விஜய் தனது ரசிகர்களிடம் அந்த அளவுக்கு தனது அரசியல் வருகையின் நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

நேற்று பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் இட
இரங்களுக்கு வந்த விஜய், வீடு திரும்பும் வழியில் அவரது காரை சுற்றி பல ரசிகர்கள் போட்டோ எடுக்க முயல, அதில் ஒரு ரசிகர் “அண்ணா அண்ணா ஒரே ஒரு போட்டோ அண்ணா. அண்ணா கீழே இறங்கு அண்ணா”என்று காலில் விழாத குறையாக கெஞ்சி உள்ளார் விஜய் ரசிகர்.

ஆனால் விஜய், தான் இறங்கினால் மற்ற மக்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று அஞ்சி கண்டுக்காமல் இருந்து விட்டார். இந்த வீடியோ தற்போது செம்ம டிரெண்டிங்காக வைரலாகி வருகிறது.

Views: - 9

0

0