சீரியல் நடிகர் சஞ்சீவுக்கு கொரானாவா? பதறியடித்துபோய் தளபதி செய்த உதவி.. நெகிழ்ந்த சஞ்சீவ் !

26 August 2020, 6:47 pm
Quick Share

சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜய்க்கு இன்று கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள், நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இப்போது அவர் இருக்கும் Range இல் பிகில், மெர்சல் போல சுமார் விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு இவரது ரசிகர்களுக்கு இவர் எது செய்தாலும் பிடிக்கும்.

தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிறார்.

நீண்ட நாள் கழித்து தன்னுடைய கல்லூரி நண்பரான சீரியல் நடிகர் சஞ்சீவ் உடன் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பொது வேலைகளில் கூட இருவரும் வாடா போடா என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நண்பர்கள். இந்நிலையில் சமீபத்தில் சஞ்சீவ் சஞ்சீவ் கொடுத்துள்ள பேட்டியில்,

“எனக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கொரானா என பயந்து விட்டேன், உடனடியாக என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களது அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனிமையில் இருந்தேன். இந்த சமயத்தில் விஜய் எனக்கு போன் பண்ணி என்ன ஆச்சு எனக் கேட்டான்.

எனக்கு கொரானா வந்து விட்டதோ என பயமாக இருப்பதாக சொன்னேன். அதை கேட்டு சாப்பாட்டுக்கு என்ன பண்ண போற என்று விஜய் கேட்டான்.

அப்போ அவனுடைய வீட்டில் இருந்து அவன் காரில் சாப்பாடு எடுத்துக்கொண்டு என்னுடைய வீட்டிற்குச் வந்து கொடுத்தான்”. என நெகிழ்ச்சியாக இந்த சம்பவத்தை பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் .

Views: - 54

0

0