தலைவர் படத்துல தளபதியா! வேற லெவல் Combination!!

23 February 2021, 7:19 pm
Rajini vijay - Updatenews360
Quick Share

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் விஜய் தனது குரலில் ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித்தின் மாஸான இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இணையும் முதல் படம் அண்ணாத்த. ஆதலால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்தும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி ரஜினிகாந்த் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

ஹைதராபாத் படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல் முடிந்த பிறகே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது அண்ணாத்த படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணாத்த படத்தில், தளபதி விஜய் தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் பல படங்களில் பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

2

1