தைரியம் இல்லாத ரஜினி… தடாலடியாக இறங்கிய தளபதி – முதல் தேர்தலிலே முதலமைச்சர் ஆகப்போகும் விஜய்?

Author: Shree
30 May 2023, 8:47 am
vijay
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக இருந்து வந்த விஜய் தற்ப்போது நடிப்பை முழுவதுமாக ஏறகட்டிவிட்டு அரசியலில் களமிறங்கவுள்ளார். அதற்கான வேலையை அவர் பல வருடங்களுக்கு முன்னிருந்தே செய்து வருகிறார்.

தனது ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் நேரத்தில் அதன் ப்ரோமோஷனில் அரசியலும் பேசி அடித்தளம் போட்டுவந்தார். மேலும் சில வருடங்களாக படத்திற்கு படம் சுமார் 120 கோடி சம்பளமாக வாங்கி அந்த பணத்தை அரசியலுக்காக சேர்த்து வைத்துள்ளாராம். எனவே பக்காவாக பிளான் போட்டு காயை நகர்த்தி அரசியலில் குதிக்க காத்துக்கொண்டிருக்கிறார் விஜய்.

இதனிடையே சமூகஅக்கறையிலும் கவனத்தை செலுத்தி வரும் அவர் விஜய் மக்கள் இயக்கத்தை வைத்து சில திட்டங்களையும் சலுகைகளையும் செய்து வருகிறார். அதன்படி, கூட, +2 ,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பரிசுத்தொகை வழங்க உள்ளார் நடிகர் விஜய் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

அவர் நடிக்கும் கடைசி படம் தன்னுடைய 70 வது படம் தானாம். அதன் பின்னர் சினிமாவை விட்டு முழுமையாக விலகி, அரசியலில் ஈடுபட உள்ளாராம். மேலும் விஜய்யின் 70 வது படம் முழுக்க முழுக்க அதிரடி அரசியல் களத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளதாகவும்.இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் களம் இறங்க உள்ளார்.

இதனிடையே முன்னதாக மதுரையில் அரசியல் மாநாட்டை நடத்தவும் மெகா பிளான் போட்டுள்ள விஜய் அதில் தனது அரசியல் என்ட்ரியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் எம்ஜி ஆருக்கு பின்னர் மீண்டும் ஒரு நடிகரின் ஆட்சி விஜய் மூலம் அமையவுள்ளது. நடிகர் ரஜினி பல வருடங்களாக அரசியலில் குதிக்க தயக்கம் காட்டிய நிலையில், அதிரடியாக விஜய் அரசியலில் இறங்க உள்ளதை பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 354

0

0