VJ ரம்யா பதிவிட்ட புகைப்படத்தால் கேலிக்குள்ளான நடிகர் விஜய்யின் Latest Look..!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2023, 12:00 pm

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இசையமைத்துள்ளார். குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி திரையரங்ககுகளில் வெளியான இத்திரைப்படம், நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று வருகிறது.

VJRamya_Updatenews360

இந்நிலையில், நடிகை மற்றும் விஜேவுமான ரம்யா, நடிகர் விஜய்யை சந்தித்து தான் எழுதிய “Stop Weighting” என்ற புத்தகத்தை வழங்கி பபுகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.

தற்போது, VJ ரம்யா பதிவிட்ட புகைப்படம் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. ஏனெனில், இதில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறிவைத்து விஜய் “Wig” வைத்து இருப்பது அப்பட்டமாக தெரிகிறது நெட்டிசன்கள் சிலர் கிண்டலடித்து வருகின்றனர். மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என விஜய் நடிப்பில் சமீபகாலமாக வந்த திரைப்படங்கள் எல்லாமே விஜய் லுக் கேலிக்கு உள்ளாகி வருகிறது.

அதிலும் இறுதியாக வெளியான பீஸ்ட் படத்தின் போது சன் டிவியின் பேட்டி ஒன்றில், விஜய்யின் ஹேர் ஸ்டைல் வித்யாசமாக இருந்தது என்று விஜய் ரசிகர்கள் சிலரே கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜே ரம்யா பதிவிட்ட புகைப்படத்தில் விஜயின் தலைமுடி வித்தியாசமாக இருக்கவே அதனை நெட்டிசன்கள் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?