“வென்று காட்டிய விஜய்..” நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்..!

Author: Rajesh
25 January 2022, 2:57 pm

சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனிடையே அவரது, கருத்துக்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரிய நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகை ரூ.32.30 லட்சத்தை ஆகஸ்ட் மாதம் .7–ம் தேதியே செலுத்திவிட்டோம் என்று விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?