புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை கட்டித்தழுவி முத்தமிட்ட விஜய் சேதுபதி…!

Author: Udhayakumar Raman
26 June 2021, 8:18 pm
Quick Share

2010ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று மூலம் ஹீரோவான விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வளர்ந்துள்ளார். அந்த படத்திற்கு முன்னால் குறும்படங்களில் நடித்து மற்றும் திரைப்படங்களில் அங்க அங்க சில காட்சிகளில் தோன்றி, அதன்பின் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக நடித்து இன்று மலை போல் உயர்ந்து நிற்கிறார்.

“நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் இல்லையென்றால் நடிக்கமாட்டேன்” என்று இல்லாமல் ஹீரோ, வில்லன், துணை நடிகர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வதால், மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். மேலும் அவர் பேசும்பொழுது நிறையபேருக்கு அது உந்துதலாகவும் மோட்டிவேஷனலாகவும் இருப்பதால் அவரை இன்னும் அதிக பேருக்கு பிடித்துப் போகிறது.

மாஸ்டர் படத்திற்குப் பின் குழந்தைகளுக்கும் பிடித்த ஒருவராக மாறிவிட்டார். இந்நிலையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் விஜய் சேதுபதியை பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டதால் விஜய் சேதுபதி தானே நேரில் சென்று அந்த குழந்தையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கட்டிபிடித்து, முத்தம் கொடுத்து சிரித்து பேசி மகிழ்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் எமோஷனலாக கண்ணீரும் விட்டிருக்கிறார்.

விஜய் சேதுபதியை பார்த்த அந்த சிறுவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவனின் பெற்றோர்களுக்கும் சற்று ஆறுதலாக இருந்ததாம். எல்லாரிடமும் வித்தியாசம் பார்க்காமல் சமமாக பழகுவதால் தான் விஜய் சேதுபதியை எல்லோருக்கும் இவ்வளவு பிடித்துப் போகிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

Views: - 422

5

0