3C கார் கேர் நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மக்கள் செல்வன்!

27 January 2021, 1:56 pm
Quick Share

சென்னை நாவலூரில் புதிதாக 3C எனும் கார் கேர் நிறுவனத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு 5க்கும் அதிகமான படங்களில் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்ட, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மார்கோனி மதை, சைரா நரசிம்ஹா ரெட்டி, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து அதனை வெளியிட்டுள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கக்கூடியவர்.

ஹீரோவாக மட்டுமல்லாமல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், திருநங்கை கதாபாத்திரம் என்று பல அவதாரம் எடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அண்மையில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். பவானி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம்,

யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், மும்பைகார், இடம் பொருள் ஏவல் என்று பல படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தாலுகா எல்லைக்குட்பட்ட நாவலூரில் பிரபல ஆர்ஜே ரோகிணி புதிதாக 3C கார் கேர் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழாவிற்கு நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி 3C கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்த திறப்பு விழாவில் நடிகர் கயல் தேவராஜூம் கலந்து கொண்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்ஜே ரோகிணி சினிமா விமர்சகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0