நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை வெற்றிகரமாக முடித்து காட்டிய தளபதி விஜய்..! வைரலாகும் போட்டோ…!

11 August 2020, 7:04 pm
VIjay - mahesh babu - updatenews360
Quick Share

பொதுவாக நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், சமூகத்திற்கு சிறப்பான நடவடிக்கைகளை பரப்பும் விதமாக, ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச்களை விடுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில்,நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, #GreenIndiaChallenge-ல் பங்கேற்று, மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.

அதை வீடியோவாக எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது, என குறிப்பிட்டிருந்தார். மேலும், தான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய், இன்று தனது வீட்டில் மரக்கன்றை நடவு செய்துள்ளார். இதனை புகைப்படம் எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் விஜய், ” இது உங்களுக்கானது மகேஷ் பாபு. பசுமை இந்தியா மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான முயற்சி. இது நன்றி,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் இந்தப் பதிவை போட்டு சில நிமிடங்களிலே ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று நடிகர் விஜய், தனது புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 45

0

0