சூப்பர் ஸ்டாரு ரஜினி யானை இல்ல குதிரை… விஜய் பேசிய வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2024, 4:14 pm

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ளவர் ரஜினி. இவர்களை தொடர்ந்து கமல், விஜய், அஜித் போன்ற நாயகர்களின் படங்கள் வசூல் வேட்டை செய்யும்.

சமீப காலமாக விஜய் படங்கள் வசூல் ரீதியாக வெற்றிகளை குவித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் பட்டம் நிரந்தரம் இல்லை என ரஜினி சொன்னது முதலே அந்த பட்டத்தை தங்களின் தலைவர்களுக்கு வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் சமீப காலமாக ரஜினி, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதல் போக்கையே உருவாக்கி வருகின்றனர். விஜய் நடித்த கோட் பட வசூலுடன் ரஜினி நடித்த வேட்டையன் படத்துடன் ஒப்பிட்டு இரு ரசிகர்களும் மாறி மாறி மோதல்லில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரமுகி வெற்றி விழாவில், விஜய் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், என்னோட தலைவரு ரஜினி சார், சொல்றதுதான் செய்வாரு, செய்றதை தான் சொல்வாரு என்ற வசனத்தை வைத்து ரஜினி யானை அல்ல குதிரை என கூறியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூகு வலைளங்களில் வைரலாக்கி வருகின்றன.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?