என்னயா காசு காசுனு, போங்கயா… செத்தா கூட கேப்டன் சொன்ன விஷயம்..! வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
28 December 2023, 1:16 pm
Vijayakantha_Updatenews360
Quick Share

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

vijayakanth

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ இன்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Vijayakanth-1

இந்நிலையில், கம்பீரமான குரல் கொண்டு அவரது படங்களில் பேசிய வசனங்கள் படு பிரபலம், அதையும் தாண்டி அவர் கட்சி மேடைகளில் பேசிய பேச்சுகளை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அந்தவகையில், ஒரு நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசும்போது, என்னயா காசு காசுனு, போங்கயா நீங்களும் உங்க காசும், கோடி கோடியாய் சேத்து வெச்சு எங்கயா கொண்டு போக போறீங்க, செத்தா கூட அரணாக்கொடியை கழட்டிவிட்டு தான் உள்ள கொண்டு போய் புதைக்கிறார்கள் என பேசிய வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 251

0

0