பாதையை மாற்றிய விக்ரம்..! சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகிறார்..?

Author: Rajesh
23 February 2022, 12:58 pm

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம். தற்போது, இவர் கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்துவும், துருவ நட்சத்திரம் படத்தை கவுதம் மேனன் இயக்கி உள்ளார். மேலும், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இந்த படங்களுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். விக்ரமின் 61-வது படமான இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் அவர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகர் விக்ரம் டோலிவுட்டில் வில்லனாக அறிமுகமாக உள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?