புதிய கெட்டப்பில் சியான் விக்ரம்..! ரசிகர்களை கவர்ந்த தோற்றம்

8 August 2020, 2:00 pm
Quick Share

சியான் விக்ரமின் புதிய தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

1990ஆம் ஆண்டு ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம். அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பேசப்படவில்லை. அதனை தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த அவருக்கு, இயக்குனர் பாலா மூலம் செது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த படம் அவரை மிக சிறந்த ஒரு நடிகனாக வெளிக்காட்டியது. அதனை தொடர்ந்து, காசி, பிதாமகன், சாமி போன்ற படங்கள் அடுத்தடுத்து அவருக்கு வெற்றியை கொடுத்தது. நடிப்புக்கு மட்டும் இன்றி திரையில் தோன்றும் தனது தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

இதனை தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் , சியான் விக்ரமின் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இருண்ட பின்ணனியில், அழகிய உடற்கட்டுடன் தோற்றம் அளிக்கும் அந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அவர், நடித்துள்ள கோப்ரா, துருவ நட்சித்திரம் போன்ற படங்களை திரையில் பார்க்க எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த புகைபடம் மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Views: - 26

0

0