மனசு தாங்கல… “எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரியல.. நன்றி சொல்ல வார்த்தை இல்லை”- உருக்கமாக வீடியோ வெளியிட்ட விக்ரம்..!

Author: Vignesh
1 October 2022, 6:00 pm
Quick Share

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ளார். விக்ரமின் கனவு பாத்திரமான ஆதித்த கரிகாலனுக்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோல், பொன்னியின் செல்வன் திரைப்படமும் உலகம் முழுவதும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வசூலில் தாறுமாறு மணிரத்னம் மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று (செப்.30) உலகம் முழுவதும் ரிலீஸானது. ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற கேப்ஷனுடன் ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்குகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்கு இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்தப் படம் முதல் இரண்டு நாட்களிலேயே 80 கோடி ரூபாய் வரை வசூலித்து தரமான சம்பவம் செய்துள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் படக்குழு கொண்டாட்டத்தில் உள்ளது.

வீடியோ வெளியிட்ட விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள சியான் விக்ரம் திடீரென தனது டிவீட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். தனது கனவு பாத்திரமான ஆதித்த கரிகாலனுக்கு விக்ரம் நிஜமாகவே உயிர் கொடுத்துருக்காருப்பா என ரசிகர்களும் சிலாகித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் பலரும் விக்ரமின் நடிப்பை ரொம்பவே பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், விக்ரம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு, “அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி” என்ற கேப்ஷனுடன் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். நன்றி சொல்ல வார்த்தை இல்லை அந்த வீடியோவில், எங்க ஆரம்பிக்கிறது என தொடங்கும் விக்ரம் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறார்.

மேலும், பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைச்ச வரவேற்பு, ஆதித்த கரிகாலனுக்கு கிடைச்ச வரவேற்பு, ஆக்ரோஷமான கருத்துகள் இது எல்லாத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “நான் நிறைய படங்கள் பண்ணிருகேன், நிறைய நல்ல கேரக்டர்ஸ்ல நடிச்சிருக்கேன், ஆனா இந்த மாதிரி பெருமைப்படுற மாதிரி எல்லாருமே இது எங்களோட படம்ன்னு கொண்டாடுறாங்க.

இதவிட பெரிய ஒரு சந்தோஷம் கிடைக்காது. அனைவருக்கும் நன்றி, மணிரத்னம் சார் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் குழுவுக்கும் தேங்ஸ்” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

ட்ரெண்டிங் ஆன வீடியோ

பொன்னியின் செல்வன் வெற்றிக்காக ரசிகர்களுக்கு விக்ரம் நன்றி கூறி வெளியிட்டுள்ள வீடியோ செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது. ‘கோப்ரா’ படத்தில் விட்டதை பொன்னியின் செல்வன் ஆதித்த கரிகாலனாக பிடித்துவிட்டார் என விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக பொன்னியின் செல்வன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசியிருந்த விக்ரம், “இதுமாதிரி ஒரு படத்தில் நடிக்க மாட்டேனா என்ற கனவுகள் இருந்தன. இறுதியாக எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஆதித்த கரிகாலனின் காதல் இன்னும் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது” எனக் கூறியிருந்தார்.

Views: - 205

0

0