திருமணத்திற்கு தயாரான நடிகர் விஷால்.. மணப்பெண் யாரு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2025, 1:51 pm

நடிகர் விஷால் வேதம் படத்தின் போது அர்ஜூனுடன் இணை இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து செல்லமே படத்தில் ஹீரோவாக நடித்த அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்தனர் ரசிகர்கள்.

தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, மலைக்கோட்டை, சத்யம் என வெளியான படங்களை அத்தனையும் ஹிட். ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கிய விஷால் தனது ஸ்டைல், உடல், நடனம் என எல்லாவற்றிலும் மெனக்கெட்டு மெருகேற்றினார்.

இதையும் படியுங்க: இதுதான் பேய் படமா? ஏமாற்றத்தில் திரும்பும் ரசிகர்கள்! டிடி நெக்ஸ்ட் லெவலுக்கு இப்படி ஒரு நிலைமையா?

சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 20 வருடமாக நடித்து வரும் விஷால் தற்போது வரை திருமணம் செய்யவில்லை.

அண்மையில் பேட்டியில் கூறிய நடிகர் விஷால், நடிகர் சங்கம் திறந்தவுடன் தான் நான் திருமணம் செய்வேன், அதுவரை திருமண அறிவிப்பை பற்றி கூறமாட்டேன் என சொல்லியிருந்தார்.

நடிகர் சங்க கட்டிடப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழ் அடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Actor Vishal is getting ready for his wedding.. Do you know who the bride is

வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷாலுக்கு பிறந்தநாள் வர உள்ளதால், அன்றைய தேதி தனது திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பை விஷால் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

  • valaipechu anthanan criticize maaman movie scenes படத்தை பார்த்தால் எரிச்சலா வருது- மாமன் படத்தை பொளந்து கட்டும் பிரபலம்…
  • Leave a Reply