நடிகர் சங்க தேர்தல் வெற்றி : அஜித் விஜய்-யை சீண்டி பார்க்கும் விஷால்.. !

Author: Rajesh
23 March 2022, 2:36 pm
Quick Share

நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலிலும் விஷாலின் பாண்டவர் அணி தான் வெற்றி பெற்றுது. நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளை அந்த அணி கைப்பற்றியது. அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இருந்தது.

அந்த தேர்தலின்போது, நடிகர் சங்கத்தை கட்டியே தீருவேன் என கொடுத்த வாக்குறுதியின்படி வெற்றி பெற்றவுடன் அனைத்து நட்சத்திரங்களையும் கூப்பிட்டு அடிக்கல் நாட்டும் விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டினார்.

அதன் பிறகு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு மக்களிடம் பணம் வசூலிக்க ஒரு பலத்த திட்டத்தை அவர் போட்டார். இதற்காக நடிகர்களை வைத்து ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தி அதில் மக்களிடம் காசு வசூலித்தார். இதற்கு ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உங்களுக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் உங்கள் சொந்த காசில் அதை செய்யுங்கள் ஏன் மக்களிடம் காசு வசூலிக்கிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் அந்த கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு அழைப்பு வந்த காரணத்தினால் ரஜினி, கமல் இருவரும் மரியாதை நிமித்தம் காரணமாக அந்த போட்டியை காண சென்றனர்.

அதன் பிறகு நடிகர் சங்க கட்டடம் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது முக்கால்வாசி முடிந்துள்ளது. தற்போது மீண்டும் பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளதால் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த நடிகர்களை தாக்கும் வகையில் விஷால் பேசியுள்ளார். அதாவது இந்த கட்டிடம் முழுமைபெற அஜித், விஜய், ரஜினி, கமல் 4 பேரும் காசு கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மக்களிடமிருந்தும் நாங்கள் பணம் பெறுவோம். தேவைப்பட்டால் பிச்சை எடுத்து கூட கட்டிடத்தை கட்டுவோம் என்று பேட்டி கொடுத்து உள்ளார். இந்த பாண்டவர் அணியில் உறுப்பினர்களாக இருக்கும் கார்த்தி, நாசர், கருணாஸ் போன்றவர்கள் கட்டிடத்தை கூடிய விரைவில் முடிப்போம் என்று விஷாலுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

Views: - 385

0

0