பார்ட்டி TO ஃபாரின் டூர் வரை.. 3 எழுத்து நடிகரின் மயக்கத்தில் இருந்த வெற்றி நடிகரின் மனைவி..!

Author: Vignesh
28 June 2024, 8:29 pm

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஒருவர் டஜன் கணக்கில் படத்தை வைத்து பிசியாக இருந்து வருகிறார். அதே சமயம் அவரை சுற்றி சர்ச்சைகளும் கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு தான் வருகிறது. சக நடிகரின் மனைவியை மயக்கி தன் வலையில் விழ வைத்துள்ளது தற்போது பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது.

ஆச்சரியப்படும் அளவிற்கு புகழின் உச்சிக்கே சென்றார் என்பது நிதர்சனமான உண்மை தற்போது, தமிழ் சினிமாவை தாண்டி உலக சினிமாவிற்கே சென்று நடித்து வருகிறார். அப்படிப்பட்ட நடிகர் உச்சிக்கு சென்றாலும் அவர் பெண்கள் விஷயத்தில் வீக்காக இருப்பதால் சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கி வருகிறார். யார் விவகாரத்தை செய்தாலும் 3 எழுத்து நடிகரின் பெயர் அங்கு இடம் பெறும். அப்படி அவர் இருந்ததால் காதலித்து திருமணம் செய்த அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து விட்டார்.

இந்நிலையில், 3 எழுத்து நடிகரை சுற்றி புதிய பஞ்சாயத்து ஒன்று கோலிவுட்டில் வட்டமடித்து வருகிறது. வெற்றி நடிகர் ஒருவர் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து குழந்தை குட்டி என்று இருந்தார். தானுண்டு தன் வேலையுண்டு என்ற நடிகரின் மனைவி கொஞ்சம் மாடர்ன் கலாச்சாரத்தைக் கொண்டவர் என்பதால் பார்ட்டி ஃபன் என சுற்றி இருக்கிறார். ஒரு பார்ட்டியில் மூன்றெழுத்து நடிகரின் அறிமுகம் கிடைக்க அந்த நடிகரும் ஜாலியாக பேச இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டு இருந்தனர்.

வெற்றி நடிகரும் பார்ட்டிக்கு செல்வது வழக்கம். ஆனால், சமீப காலமாக மனைவி யாருக்கும் தெரியாமல் மூன்றெழுத்து நடிகரோடு பார்ட்டிக்கு செல்லவும். வெளிநாட்டில், அவுட்டிங் செல்லவும் இருந்து வந்துள்ளார். அடம்பிடித்து சென்ற மனைவி கணவரை விட்டுவிட்டு மூன்றெழுத்து நடிகரோடு நேரம் செலவிட்டுள்ளார். சாதாரணமாக ஆரம்பத்தில் இதை எடுத்துக் கொண்ட வெற்றி நடிகர், மனைவி அடிக்கடி 3 எழுத்து நடிகருக்கு இரவு நேரத்தில் போன் செய்து கடலை போட்டு இருக்கிறார். இதை வெற்றி நடிகர் கண்டித்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான், விவாகரத்து வரை சென்றுள்ளதாக கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?