காஸ்ட்லியான சொகுசு கார் வாங்கி மாஸ் காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி.. விலையை மட்டும் கேட்டா அசந்துடுவீங்க..!

Author: Vignesh
16 February 2024, 12:25 pm

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.

aishwarya lekshmi - updatenews360

வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும் விதம் கண்ஜாடை இவற்றில் தனது காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி அத்தோடு வீரமாக சோழர் குலப் பெண் என்பதை உணர்த்தும் வகையில் ஆதிக்கு என்னோடு யானையில் வரும்போது இவர் வெளிப்படுத்திய மிடுக்கு அனைவரையும் ஒரு நிமிடம் திக் திக் என மாற்றி உள்ளது.

aishwarya lekshmi - updatenews360

எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்றுதான் மனம் நினைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

aishwarya lekshmi - updatenews360

அதன்பின் விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி படத்தில் நடித்து வெற்றிக் கண்டார். இப்போது, இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பொன்னியின் செல்வன் பூங்குழலி என்று மூக்கில் விரலை வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவுக்கு கிளாமர் சொட்ட சொட்ட புகைப்படங்கள் உள்ளது. இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

aishwarya lekshmi - updatenews360

இப்படியெல்லாம் கூட ஐஸ்வர்யா லட்சுமியால் புகைப்படங்களை வெளியிட முடியுமா என்று எண்ணுமளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கிறார். இந்நிலையில், பிஸியாக தமிழ், மலையாளம் என நடித்துவரும் ஐஸ்வர்யா லட்சுமி அண்மையில் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். Range Rover Evoque 2024 மாடல் காரை வாங்கியுள்ளார். கேரளாவில் இந்த மாடல் காரை வாங்கும் முதல் நபர் ஐஸ்வர்யா லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மானின் கார் நிறுவனத்தில் தான் அவர் இந்த காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

  • Akhil Akkineni, Zainab Ravdjee trolled for nine-year age gap நாகர்ஜூனா குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி.. AUNTYஐ திருமணம் செய்யும் மகன்..!!
  • Views: - 264

    0

    0