“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு..” கைய தூக்கி ஐஷ்வர்யா ராஜேஷ் கொடுத்த போஸ் !

Author: Rajesh
6 February 2022, 9:46 am

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார். திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக நிறைய Hot Photoshoot செய்து வருகிறார். தற்போது கவர்ச்சியான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பழகு தெரிவது போன்று கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!