“காரில் ஜாலியான Ride.” ஐஸ்வர்யா ராஜேஷின் செம கிக்கான புகைப்படம் வைரல்.!

Author: Rajesh
6 July 2022, 5:56 pm
Aishwarya Rajesh
Quick Share

ஐஸ்வர்யா ராஜேஷ் “காக்கா முட்டை” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பினார். ஒரு முன்னணி கதாநாயகி ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் பெரும்பாலும் மறுப்பர். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் முன்னணி நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். மலையாள படமான “ஜோமோண்டே சுவிசேஷங்களில்” நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் மற்றொரு மலையாள படமான “புலிமட” படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது காரில் செம கிக்காக இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

Views: - 271

1

0