உனக்கு மட்டும் இல்ல…. சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள் – பிரபல நடிகை காட்டம்!

Author: Shree
31 October 2023, 11:20 am

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் – இமான் என இருவருக்கும் ஆதரவாக பலர் மாறி மாறி கருது கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நடிகை அனுபரமி , இமான் சொல்வது போல் சிவகார்த்திகேயன் அந்த விஷயத்தை செய்தாரா இல்லையா என்பதே இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. சொன்னால் தனது குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என இமான் சொல்கிறார். அதே போல் தான் சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் இதை பற்றி கேட்டால் என்ன நினைப்பார்கள்.

இந்த சம்பவம் நடந்த உடனே வெளியில் வந்து பேசாமல் இத்தனை ஆண்டுகள் கழித்து இதை வெளியில் சொல்வது ஏன்? எனவே சிவகார்த்திகேயனை சினிமாவில் இருந்தே அழிக்க இமானை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள். மனிதன் என்றால் தவறு செய்வது சகஜம்தான், அதற்காக அதை வெளியில் சொல்லி ஏன் அசிங்கப்படுத்தவேண்டும். அந்தரங்கத்தை வெளியில் சொல்லாமல் விட்டிருக்கலாம் என அனுபரமி சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கருத்து கூறி இருக்கிறார். இதனை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!