என்னிடமும் பட வாய்ப்புக்காக அப்படி நடந்துக்க சொன்னார்கள் – வெளிப்படையாக கூறிய அனுஷ்கா..!

8 February 2021, 10:29 pm
Quick Share

குண்டாக இருப்பதால், கடும் மன உழைச்சலில் இருக்கிறார் நம்ம அனுஷ்கா. இதனால், பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால், இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது. ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார். தற்போது இவர் நடித்த அருந்ததி, பாகுபலி என அனுஷ்கா கம்பீரமாக நடித்த படங்கள் வரவேற்பைப் பெற்றன.

அதனால் அனுஷ்கா ‘சகுந்தலம்’ என்னும் வரலாற்று படத்தில் மேலாடை அணியாத காஸ்ட்யூம்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்த படத்திலிருந்து விலகியுள்ளாராம். இந்தநிலையில், சமீப காலமாக, சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் பலர் மீ டூவில் பேசி வந்தார்கள். சில நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர்.

தற்போது இது குறித்து, அனுஷ்கா ஒரு பேட்டியில் பேசியுள்ளார், ” பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இருக்கிறது. நானும் சினிமாவுக்கு வந்த புதிதில் இதை கடந்துதான் வந்தேன். நான் மறுத்தபிறகு எந்த தொந்தரவுகள் இல்லை. திரையுலகில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது என்றும், ஆனால் திரையுலகம் கவர்ச்சியானது என்பதால் அது வெளியே தெரிகிறது” என்றும் அனுஷ்கா கூறினார்.

Views: - 1

0

0