பட வாய்ப்புக்காக தப்பு பண்ணி இப்ப வரைக்கும் எந்திரிக்க முடியல.. ஓப்பனாக பேசிய பிரபல நடிகை..!

Author: Vignesh
6 December 2023, 3:00 pm

பிரபல நடிகையாக 80களில் வலம் வந்தவர் நடிகை பாக்கியலட்சுமி. இவர் தமிழ் மொழிகளை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை பாக்கியலட்சுமி தற்போது, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பல்வேறு விஷயங்களை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், 14 வயதில் சினிமாவில் சினிமாவிற்கு வந்ததாகவும், உடலை பெரிதாக்குவதற்காக ஊசி போட்டுக் கொண்டதாகவும், அந்த சமயத்தில் நடிகைகள் எல்லோரும் கொஞ்சம் குண்டாகத்தான் இருப்பார்கள். அந்த மாதிரி குண்டாக ஆசைப்பட்டு பட வாய்ப்புக்காக ஊசி போட்டுக் கொண்டேன்.

actress-bhagyalakshmi

அதன் பின்னர் உடல் எடை போட்டு எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஊசி போட்டதற்கான பக்க விளைவுகளை தற்போது வரை அனுபவித்து வருகிறேன். கர்ப்ப காலத்தில் தான் இது தனக்கு தெரிய வந்தது. ஊசி போட்ட விவகாரம் பற்றி அம்மாவுக்கு தெரியும். ஆனால், அப்பாவுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்று பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?