“,இந்த சின்ன காரணத்திற்காக என்னை சீரியலில் இருந்து தூக்கிட்டாங்க” – செம்பருத்தி சீரியல் நடிகை கண்ணீர் வீடியோ!
18 August 2020, 7:26 pmஇன்று மக்கள் பலரும் அவர்களின் சொந்த பிரச்சினையை விட சீரியலில் நடிக்கும் நடிகர்களின் பிரச்சினையதான் பெரிதாக பார்க்கிறார்கள். இன்றைய தலைமுறையும் சீரியலுக்கு அடிமையாகி உள்ளனர் என்று வருத்தத்துடன் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். இளைஞர்கள் தற்போது Am a big of Games of Thrones, Breaking Bad Series லாம் பார்த்து இருக்கீங்களா பாஸ் ? என்று உதார் விட்டாலும் இன்று சித்தி 2 – வில் என்ன நடக்கும் என்கிற ஆர்வமே அதிகம்.
அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலை மக்கள் பலரும் விரும்பி பார்ப்பதுண்டு. இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்த பரதா நாய்டு தற்போது சீரியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “நான் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு வரை நடித்துக்கொடுத்தேன். திருமணத்திற்காக விடுமுறை கேட்ட ஒரே காரணத்திற்காக என்னை சீரியலில் இருந்து தூக்கிவிட்டனர்” என்று அவர் கூறியுள்ளார். மேலும், அந்த சீரியலில் பல பாலிட்டிக்ஸ் உள்ளது, என்றும் சில அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். ஆனால், இவரை வெளியேற்றிய காரணம் இது தான் என அவரே கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள், இந்த பாலிடிக்ஸ் இல்லாத இடமே இல்லையா என்று புலம்பி வருகிறார்கள்.