அடடே.. பூமிகாவின் மகனா இது..! இவ்வளவு பெரிய பையனா வளர்ந்துட்டாரே..!

Author: Vignesh
7 July 2023, 4:14 pm
Quick Share

2001 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா.

இதையடுத்து, சில படங்களில் நடித்து வந்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இவர் தென்னிந்திய படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

bhoomika-updatenews360

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை பூமிகா, சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.

bhoomika-updatenews360

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், “கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க எனக்கு ஓகே” என்று கூறி இருந்தார். சொன்னதுபோல், வெப்சீரிஸ் ஒன்றில் படங்களில் இல்லாத அளவுக்கு செம்ம கவர்ச்சியாக நடித்து வருகிறாராம்.

2007 ஆம் ஆண்டு பரத்தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பூமி காவிற்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது பூமிகா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்த போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் பூமிகாக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

boomika-updatenews360
boomika-updatenews360
Views: - 364

1

0