சிம்பு உடனான காதல் பிரேக்-அப்.. திருமணத்தில் கணவர் முன்பே மனம் திறந்த ஹன்சிகா..! வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
9 February 2023, 11:00 am
Quick Share

தமிழில் ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. அதன் பிறகு பிரியாணி, மான் கராத்தே, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

hansika - updatenews360.jpg 2

இதனிடையே, நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

hansika motwani -updatenews360

திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது 6 படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ஹன்சிகா தனது திருமண வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் திருமண வீடியோ பிப்ரவரி 10ம் தேதி வெளியாக இருப்பதாக டீசர் ஒன்று வெளியாகி உள்ளது.

hansika - updatenews360.jpg 4

லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஹன்சிகா – சோஹேல் கத்தூரியா ஜோடியின் திருமண வீடியோ வெளியாக உள்ளது. அந்த வீடியோவில் எந்த மனிதரின் Past நடந்த விஷயங்கள் பற்றி பேசவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று அழுகும் காட்சிகள் சிலது டீசரில் இடம்பெற்றுள்ளது.

ஹன்சிகாவின் கணவர் சோஹேல் கத்தூரியாவின் முன்னாள் மனைவியை குறித்து பல ட்ரோல்கள் கிளம்பிய நிலையில், அதற்கு மறைமுகமாக ஹன்சிகா பேசியுள்ளார் என சொல்லப்படுகிறது.

hansika - updatenews360.jpg 4

இதனிடையே, அந்த வீடியோவின் பிரமோவில், கணவர் சோஹைலை வைத்துக்கொண்டு நான் சினிமாவில் நடித்த போது பொதுமக்களின் பார்வையில் நான் ஏற்கனவே ஒருவருடன் உறவில் இருந்தேன் என்றும் அதை நான் மீண்டும் செய்ய விரும்பவில்லை என ஹன்சிகா கூறியுள்ளார்.

hansika - updatenews360.jpg 4

மேலும் தனக்கு திடீரென நிகழ்ந்தது என்றும் கூறியுள்ளார். மீண்டும் ஊர் அறிய ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அது தான் திருமணம் செய்யப்போகும் நபராக இருக்க வேண்டும் என்று நினைத்து உறுதியாக இருந்ததாகவும், அது தற்போது நடந்துள்ளது என்று உருக்கமாக ஹன்சிகா கூறியுள்ளார்.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 479

    0

    0