Bath Tub-ல், கையில் மதுவுடன் சூடேற்றும் ஹன்சிகா: வைரல் வீடியோ..!
Author: Aarthi Sivakumar14 August 2021, 11:59 am
ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்.
ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள்.
பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.
என்னதான் உடல் எடையை எல்லாம் குறைத்து கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தினாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில்தான் இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தனது பிகினி படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அவர் தற்போது பாத்ரூம் டப்பில் தான் படுத்திருப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
1
0