லென்ஸ் அணிந்ததால் கண் பார்வை போய்டுச்சு.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிம்பு பட நடிகை..!

Author: Vignesh
22 July 2024, 2:20 pm

தமிழ் சினிமாவில் வானம் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஜாஸ்மின் பாஷின். இவர் டெல்லியில் நடந்த கடந்த ஜூலை 17ஆம் தேதி பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது கண்ணில் காண்டாக் லென்ஸ் போட்டிருந்த நிலையில், கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்ள வேண்டும் என்பதால் பொறுத்துக் கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ராம்வாக் செய்திருக்கிறார். கண் பார்வை பறிபோய் எதுவுமே பார்க்க முடியாத நிலையில், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உதவி உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் சோதித்த போது அவருக்கு corneal damage ஏற்பட்டு இருக்கிறது என சொல்லி இரண்டு கண்களுக்கும் கட்டு போட்டு விட்டார்கள். தற்போது, மும்பைக்கு வந்து சிகிச்சையை தொடர்ந்து வருகிறேன். இப்போது கண்பார்வை சரியாகி வருகிறது என ஜாஸ்மின் பாஷின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?