கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சினிமாவில் அந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கு.. காஜல் அகர்வால் வேதனை..!

Author: Vignesh
23 May 2024, 12:29 pm

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!

தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

kajal aggarwal - updatenews360

மேலும் படிக்க: ஆத்தாடி.. பிரியங்கா சோப்ரா கழுத்தில் இருக்கும் நெக்லஸின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க அது இணையத்தில் வெளியாகும். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வாலிடம் திருமண வாழ்க்கை பின் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது.

kajal aggarwal - updatenews360

இதற்கு பதில் அளித்த காஜல் அகர்வால் திருமணம் முடிந்தவுடன் ஹீரோயின்களுக்கு சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால், எனக்கு திருமணம் முடிந்த பிறகு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் சினிமாவிற்கு முன்பு பின்பு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால், ஹிந்தியில் சினிமாவில் ஹீரோயின்கள் திருமணத்திற்கு பின்பு அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால், தெலுங்கு சினிமாவில் அப்படி இல்லை திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள். தெலுங்கிலும் விரைவில் மாற்றம் வரும் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?