“அவன் ஏன் Singapore போனான்..?” ஆனந்த கண்ணன் குறித்து வேதனை அடைந்த காஜல் பசுபதி

Author: Aarthi Sivakumar
20 August 2021, 8:30 am
Quick Share

2000 காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவர் VJ ஆனந்த கண்ணன், சன் டிவியில், சன் மியூசிக்கில், என சன் குழுமத் தொலைக்காட்சி செய்தியில் கலக்கிக் கொண்டிருந்த இவர் நடுவில் என்ன ஆச்சு என ஆள் அட்ரஸ் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நாயகனாக நடித்தார்.

இந்நிலையில் VJ ஆனந்தக் கண்ணன் திடீரென கேன்சர் நோயால் மரணம் அடைந்துள்ளார் என்கிற செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மக்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஆனந்த கண்ணன் உடன் பணிபுரிந்த காஜல் பசுபதி, ஆனந்த கண்ணன் குறித்து வேதனை அடைந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள “அவர், நீங்கள் திரையில் பார்ப்பது போல நிஜத்திலும் எப்போதும் சிரித்து கொண்டே இருப்பான். இறுதியாக அவனை ஒரு பேட்டியில் சந்தித்தேன். அதன்பின் அவனை பார்க்கவில்லை. போன் செய்கிறேன் என்றான், ஆனால் செய்யவில்லை. அவனுக்கு கேன்சர் என்று சொல்கிறார்கள், அதை பற்றி எனக்கு தெரியவே தெரியாது. அதை பத்தி நமக்கு எதுவுமே தெரியலனு அசிங்கமா இருக்கு. அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல, அப்பறம் எப்படி கேன்சர் வந்துச்சுனு தெரியல. அது மட்டுமல்லாமல், சன் டிவியில இருந்தவங்க எல்லாம் ரீயூனியன் வைக்கணும்னு சொல்லிட்டு இருந்தான்” என்று வேதனையாக கூறினார்.

மேலும், சன் மியூசிக்கில் பணியாற்றிய வரை நல்லா இருந்தாரே, அப்பறம் ஏன் சிங்கப்பூர் போனாரு என கேள்விக்கு, அங்க அவன் பிசினஸ் நல்லபடியா போச்சு, அதன்பின் அவனும் பிரஜினும் சேர்ந்து படம் பண்ணாங்க, அது என்ன ஆச்சுனு தெரியல” என்றார்.

Views: - 457

0

0