“நடிகர் சுஷாந்த் மரணத்திற்கு இவர் தான் காரணம்” – நடிகை கங்கனா ரணாவத் பகிரங்க குற்றச்சாட்டு..!
2 September 2020, 12:57 pmநடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை கங்கனா ரணாவத் பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக நாள்தொறும் பல்வேறு சர்சை கருத்துகள் வெளியாகி வருகிறது. அவரின் தற்கொலைக்கு என்ன காரணம், யாரால் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலிவுட் திரையுலகையே அதிர வைத்த இந்த சம்பவத்தில் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில், சுஷாந்தின் மரணம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை கங்கனா ரணாவத் பதிலளித்துள்ளார்.
அதில், தயாரிப்பாளர் கரன் ஜோஹர் பாலிவுட் திரையுலக மாபியா கும்பலில் முக்கிய குற்றவாளி என தெரிவித்துள்ளார். மேலும், பலரது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சிதைத்தவர் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகிறார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
0
0