ஒரு போட்டோனாலும் Worth.. டாப் ஆங்கிளில் பளிச்சின்னு காட்டி போஸ் கொடுத்த கனிகாவின் வைரல் பிக்..

Author: Vignesh
1 January 2023, 11:00 am

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

Kaniha_UpdateNews360

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.மேலும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கன்னிகாவா இவ்வளவு கவர்ச்சியாக உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Kaniha_UpdateNews360
  • cooku with comali season 6 contestants list குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!