விடுப்புக்காக முதலாளியுடன் படுக்கையை பகிர்ந்த நடிகை? பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்…
Author: Prasad23 August 2025, 3:55 pm
கனடாவைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகை கேத்ரீன் ரியான். இவர் ஒரு பாடகரும் கூட. இவர் பல டிவி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். பல ரேடியோ நிகழ்ச்சிகள் மூலமும் பிரபலமாக ஆனவர். இவ்வாறு பல பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது விடுப்பு எடுப்பதற்காக தனது முதலாளியிடம் படுக்கையை பகிர்ந்துகொண்ட சம்பவம் ஒன்றை குறித்து பகிர்ந்துகொண்டது அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் தற்போது வரை நெட்டிசன்கள் இவரை பந்தாடி வருகின்றனர்.
கேத்ரீனுக்கு தற்போது 42 வயது ஆகிறது. அவரது 25 ஆவது வயதில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் சீக்கிரம் வீட்டிற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு அனுமதி கேட்பதற்காக அவரது பாஸை அணுகியுள்ளார்.

அங்கே கேத்ரீன் பாஸிடம், “உங்களுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டால் என்னை சீக்கிரம் வீட்டிற்கு விட்டுவிடுவீர்களா?” என கேட்டாராம். அதற்கு பாஸும் ஒப்புக்கொள்ள, கேத்ரீன் பாஸுடன் பாலியல் உறவு கொண்டு சீக்கிரம் வீட்டிற்கு புறப்பட்டாராம். அந்த அலுவலகத்தில் பல பெண்கள் இவ்வாறு ஒரு அணுகுமுறையை வைத்திருந்தார்கள் எனவும் அப்பேட்டியில் கேத்ரீன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இந்த யோசனையை பாஸ் ஒரு போதும் முன் வைத்ததில்லை. உண்மையில் நான் அவரை விரும்பினேன். அவர் மீது ஒரு ஆசை இருந்தது. அதனால்தான் அவ்வாறு செய்தேன்” எனவும் கூறி அதிர்ச்சியை கிளப்பினார். இப்பேட்டி இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கேத்ரீனை கண்டபடி விமர்சித்து வருகின்றனர். எனினும் கேத்ரீன் அவருக்கு விருப்பப்பட்ட ஒன்றையே செய்திருக்கிறார் எனவும் சிலர் அவருக்கு ஆதரவாகவும் நிற்கின்றனர்.
