விஜய்யின் முதல் காதலி அவங்கதான்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை கௌசல்யா..!

Author: Vignesh
5 February 2024, 5:19 pm

அழகு புதுமையான, அமைதியான , பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

kausalya - updatenews360

பெங்களூரில் பிறந்த இவர் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தும் திருமணமே எனக்கு வேண்டாம் என கூறி நிராகரித்துவிட்டார். தற்போது இவருக்கு வயது 43 என்பது குறிப்பிடத்தக்கது.

Kausalya - updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற கௌசல்யா நான் திருமணத்தை எதிர்பார்ப்பவள் இல்லை என்றும், என்னுடைய கருத்திற்கு ஏற்ப பிடித்தமான ஒருவரை இன்னும் தான் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் மட்டும் என் வாழ்க்கையில் வந்தார்.

kausalya - updatenews360

ஆனால், சில காரணங்களால், பிரேக்கப் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எனக்கு விஜயுடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் படம் மிகவும் பிடித்த படம் விஜய் தான் என்னுடைய க்ரஷ் என்று கௌசல்யா தெரிவித்துள்ளார்.

Kausalya - updatenews360

முதல்லில், விஜய்யை நேருக்கு நேர் படத்தின் செட்டில் தான் பார்த்தேன். அப்ப அவர் மிகவும் பணிவான ஒரு மனிதராக நடந்து கொண்டார். எனக்கு டயலாக் வராது. அதனால், நான் நிறைய டேக் வாங்கினாலும் அவர் என்னை திட்ட மாட்டார். சலித்துக் கொள்ளவும் மாட்டார். எனக்கு உதவி செய்வார். இல்லையென்றால், அமைதியாக இருப்பார். ஒரு முறை நானும் விஜயும் டயலாக் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்தோம். விஜய் சத்தமாக டயலாக் சொல்லி ப்ராக்டிஸ் செய்வார்.

நான் மனசுக்குள்ளேயே சொல்லி பிராக்டிஸ் செய்வேன். அப்போது இயக்குனர் வசந்த் சார் என்னிடம் சொன்னார் விஜய்யை பார்த்து அதே போல பிராக்டீஸ் பண்ணுங்க அப்போ உங்களுக்கு டயலாக் சரியா வரும் என்று சொன்னார். அவரைப் போல பிராக்டிஸ் செய்த பிறகுதான் எனக்கு டயலாக் சரியாக வர ஆரம்பித்தது என்று கௌசல்யா தெரிவித்துள்ளார்.

Vijay - Updatenews360

விஜயின் முதல் காதலி யார் என்று எனக்குத்தான் முதலில் தெரியும் என சற்று அமைதியாக இருந்து, விஜயின் முதல் காதலி சங்கீதா என்றும், கடைசியாக அவரையே விஜய் திருமணமும் செய்து கொண்டார் என கௌசல்யா தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏம்மா இதுக்கா இந்த பில்டப் நாங்க என்னென்னமோ நினைச்சுட்டோமே என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!