“இனி எந்த State-u கேரளா..” Onam Saree-ல் ஓவியம் போல இருக்கும் கீர்த்தி சுரேஷ் !

Author: kavin kumar
21 August 2021, 8:17 pm
Quick Share

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். இந்தநிலையில், இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகைகள் பலரும் கேரள ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது கீர்த்தி சுரேஷும் ஓணம் ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஹோம்லி சேச்சி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 891

17

1