கண்ணுல கத்தி குத்து வாங்கிய குஷ்பு…! வைரலாகும் புகைப்படம்…!

19 August 2020, 1:32 pm
Quick Share

தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதபி என படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில், ”என்னால இனி கொஞ்ச நாளைக்கு வீட்டுக்கு வர முடியாது, கண்ணுல கத்தி பட்டுவிட்டது” என்று கண்ணில் Band-Aid போட்டு புகைப்படத்தை ஒன்றை Upload செய்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு சீக்கிரம் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறுகிறார்.

Views: - 47

0

0