43வது பிறந்தநாளை குழந்தை போல் கியூட்டா கொண்டாடிய லைலா – வைரல் வீடியோ!

Author: Shree
30 October 2023, 11:39 am

தமிழ் சினிமா ரசிகர்களை தன் குழந்தை போன்ற எக்ஸ்பிரஷன் கியூட்டான பேச்சு உள்ளிட்டவற்றால் கவர்ந்திழுத்தவர் நடிகை லைலா. இவர் தமிழ்த் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தொடர்ந்து விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்து நல்ல பெயர் வாங்கிய லைலா 2006ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார். சில வருடங்கள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதையடுத்து சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் நடித்தார். அடுத்ததாக விஜய்யின் 68வது படத்திலும் கமிட்டாகியுள்ளார். தளபதி 68 பூஜை புகைப்படத்தில் லைலா இடம்பெற்றிருந்தது பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் லைலா தனது 43 வது பிறந்தநாளை கேக் வெட்டி மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!