‘MAKING VIDEO மாதிரி இருக்குங்க’.. PS-2வின் ‘அகநக’ பாடலுக்கு ரம்மிய நடனமாடிய மஞ்சு வாரியர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 March 2023, 7:21 pm

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சரித்திர வெற்றி படைத்தது. அதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் முதல் சிங்கிளாக ‘அக நக’ பாடலின் லிரிக் வீடியோ அண்மையில் வெளியானது. பாடகர் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ள இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியுள்ளார்.

வந்தியத்தேவன் (கார்த்தி), குந்தவி (த்ரிஷா) ரொமான்டிக் பாடலான இது தற்போது வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், இந்தப் பாடலுக்கு பிரபல நடிகை மஞ்சு வாரியர் சிறப்பாக நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/ManjuWarrier4/status/1641428185064804358?s=20
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!